With years of experience backing us, our team at Tristar is well equipped to handle issues such as registration delays, Stamp issues and other related matters. You need not worry about the legalities of your transactions anymore, leave it to Tristar.
இங்கு நாம் சொத்து எனக் குறிப்பிடுவது வீட்டு மனை, காலி நிலம், விவசாய நிலம், வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடங்கள் என அனைத்திற்கும் பொருந்தும். இவை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான தொடக்கம் முதல் முடிவு வரையிலான அனைத்து சேவைகளையும் சிறப்பாக வழங்குகிறோம்.
நீங்கள் ஒரு சொத்து வாங்க விரும்பினால், உங்களுடன் கலந்து பேசி, என்ன தேவைக்காக வாங்குகிறீர்கள் என்பதை நன்கு அறிந்து, உங்கள் நிதி ஆதாரத்திற்கேற்ப பொருத்தமான ஆலோசனை சொல்வோம். சொத்திற்குரிய சரியான சந்தை மதிப்பினை விசாரித்து தெரிவிப்போம்.
நேரில் அழைத்துச் சென்று, சொத்தினைப் பார்வையிட்ட பின், வாங்குவதை உறுதி செய்தவுடன் சொத்திற்குரிய சரியான சந்தை மதிப்பினை எடுத்துரைப்போம். அந்த சொத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளை எடுத்துக் கூறுவோம்.
சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, எல்லாம் சட்டரீதியில் சரியாக இருக்கின்றனவா என உறுதி செய்வோம்.
பத்திரப் பதிவுக்கான ஆவணங்களை மிகச் சரியாக தயாரிப்போம். எதுவும் விடுபட்டுப் போகாமலும், எதிர்காலத்தில் பிரச்சினையோ, குழப்பங்களோ நேராவண்ணம் சரியான விவரங்களுடன் ஆவணங்களை தயாரிப்போம்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தைப் பதிவு செய்வதற்கு முறையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவோம். பின்பு பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, வில்லங்கச் சான்றிதழும் பெற்று பதிவை உறுதி செய்வோம்.
பத்திரம் உங்கள் பெயரில் இருந்தாலும், சொத்திற்கான பட்டாவும் உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்து தருவோம்.
நீங்கள் சொத்தினை விற்பவராக இருந்தால், வாங்குபவர்களைக் கண்டறிந்து உங்களுக்குத் தெரிவிப்போம். சொத்து மதிப்பினை சந்தைக்கேற்பவும், விற்பவர் மற்றும் வாங்குபவர் நிலைக்கேற்பவும் பொருத்தமாக நிர்ணயம் செய்ய உதவுவோம். பின்னர், வாங்குபவர்களுக்கு சொத்தினை நேரில் காண்பிப்பதில் இருந்து பத்திரப் பதிவு முடிந்து பணம் விற்பவருக்குப் போய் சேரும்வரை அனைத்தையும் உடனிருந்து முடித்துக் கொடுப்போம்.
பாரம்பரிய சொத்துக்களில் பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையினை ஆராய்ந்து பொருத்தமான, சட்டப்பூர்வ ஆலோசனைகளை வழங்குவோம். பிரச்சினைக்குரிய இரு தரப்பினரோ அல்லது பலதரப்பினரோ, அவர்களுடன் பேசி சரியான முடிவை எட்டி, இறுதி வரை உடனிருந்து முடித்துக் கொடுப்போம்.
மூலப்பத்திரங்களோ, மூல ஆவணங்களோ காணாமல் போயிருந்தால், அவற்றை தொடர்புடைய அரசு அலுவலகங்களில் இருந்து மீண்டும் பெற தேவையானவற்றை செய்வோம்.
ஏற்கெனவே ஏதேனும் சொத்து வாங்கியிருந்து அதன் ஆவணங்களில் பிழை இருந்தாலோ, விவரங்கள் போதுமான அளவில் இல்லாமல் இருந்தாலோ, பின்னால் சட்டப்பூர்வ பிரச்சினைகள் வரக்கூடும் எனத் தெரிந்தாலோ, அந்த ஆவணங்களை ஆராய்ந்து அதனை முறைப்படுத்தி வழங்குவோம்.
குறிப்பிட்ட சொத்து வாங்க முடிவு செய்து, மதிப்பு உட்பட அனைத்தையும் பேசி முடித்தபின், பத்திரப் பதிவு ஆவணங்கள் தயாரிப்பதில் சிரமம் இருந்தால் அவற்றை சிறப்பாக தயாரித்து நீங்களே பதிந்து கொள்ள ஆவன செய்கிறோம்.
நீங்கள் ஏதேனும் சொத்து வாங்கவும், பதிவு செய்வது உட்பட அனைத்து நடைமுறைகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கலாம். ஆனால் அந்த சொத்தினை வாங்கலாமா, வேண்டாமா என முடிவு செய்ய எங்களால் சீர்தூக்கிப் பார்த்து அறிக்கையாக (Report) தர முடியும். அதனடிப்படையில் உங்கள் முடிவினை செயற்படுத்தலாம்.